உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அ.தி.மு.க., மாஜி படம் வைத்த விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்

அ.தி.மு.க., மாஜி படம் வைத்த விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மூன்று நாட்களாக மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. போட்டியில், புதுக்கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரில் உள்ள கிளப் வீரர் - வீராங்கனையரும் பங்கேற்றனர். மேலும், போட்டிக்கு அவர் நிதி கொடுத்ததால், அவரை வரவேற்க, அண்ணா விளையாட்டு அரங்கின் உள்ளே, சில இடங்களில் அவரது படத்துடன் வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர். அதை பார்த்த தி.மு.க.,வினர், அமைச்சர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.அவரோ, உடனடியாக திருச்சி கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினார். அடுத்த சில நிமிடங்களில், அ.தி.மு.க., மாஜி படம் போட்ட பதாகைகள் சாய்க்கப்பட்டன.இந்நிலையில், அ.தி.மு.க., ஆதரவாளர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததாகவும், அ.தி.மு.க., மாஜிக்கு பதாகைகள் வைத்தது தொடர்பாகவும், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பதில், கண்ணன் என்பவர் விளையாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !