உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாஜியை சந்திக்க வக்கீல்களை அனுமதித்த ஏட்டு சஸ்பெண்ட்

மாஜியை சந்திக்க வக்கீல்களை அனுமதித்த ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி:கரூரைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கி, குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, ஜூலை, 31ல் ஜாமின் கிடைத்தது. ஜாமினில் வெளியே வரவிருந்த அவரை, அன்று மட்டும், 35 வழக்கறிஞர்கள், சிறை கண்காணிப்பாளர் அனுமதியுடன் பார்த்தனர். அவரை பார்த்து வெளியே வந்த அவர்கள், சிறையின் முக்கிய வாசல் அருகேயே, ஜாமினில் வெளியே வரும் விஜயபாஸ்கரை வரவேற்க நின்று விட்டனர்.'அந்த இடத்தில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்பது சிறை விதி. ஆனால் அதையெல்லாம் மீறி, 50க்கும் மேற்பட்டோர் சிறையின் முக்கிய வாசலை அடைத்துக் கொண்டு, ஜாமினில் வெளியே வந்த விஜயபாஸ்கரை கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.இது, 'அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக திருச்சி சிறைத்துறை உள்ளது' என தகவல் பரவியது. இதையடுத்து, அவர்களை அனுமதித்தது யார் என விசாரிக்க, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். திருச்சி சிறைத்துறை பொறுப்பு டி.ஐ.ஜி., பழனி விசாரித்தார். அதன்படி, அன்று பணியில் இருந்த சிறைத்துறை ஏட்டு கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மேலும், அங்கு பணியில் இருந்த போலீசார் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை