கவரிங் நகை அடகு மோசடி ஆட்டோ டிரைவர்கள் கைது
திருச்சி:திருச்சி, பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சரவணன், 37, ராம்குமார், 32, டேவிட், 35. இவர்கள் மூவரும் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்து கடந்த சில மாதமாக பணம் பெற்றனர். அவை போலி என சமீபத்தில் தெரியவந்தது.இதுகுறித்து, அந்தந்த நிதி நிதிறுவனங்கள் சார்பில், பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர்கள் சரவணன், ராம்குமார், டேவிட் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை, அசல் தங்க நகைககள் போல, சென்னையைச் சேர்ந்த கும்பல் தயாரித்துக் கொடுக்கிறது. அவர்களிடம் மிகக்குறைந்த விலைக்கு அந்த நகைகளை வாங்கி, அவற்றை அடகு வைத்து, மூவரும், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பொதுத்துறை வங்கியான 'யூகோ' வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட முகமது ஹபீஸ், நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இரண்டு பெண்கள் உட்பட, மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.