உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.3000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.3000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தந்தை 2002ல் இறந்தார். தேவிக்கு, வாரிசு சான்றிதழ் கேட்டு, திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் ரத்தினகுமார் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம், கோ.அபிேஷகபுரம் வி.ஏ.ஓ., செந்தில்குமார், 43, ஒப்புதலுக்காக சென்றது.அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், ரத்தினகுமார் அவரை நேரில் சந்தித்தார். அப்போது, வாரிசு விண்ணப்பத்தில் கையெழுத்திட, 3000 ரூபாய் லஞ்சம் கேட்டார். திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம், நேற்று முன்தினம் ரத்தினகுமார் புகார் அளித்தார். நேற்று காலை கோ.அபிேஷகபுரம் அலுவலகத்தில், லஞ்சப்பணத்தை ரத்தினகுமார் கொடுக்க, அதை வாங்கிய வி.ஏ.ஓ., செந்தில்குமாரை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து, பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை