உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சிறப்பு முகாமில் தப்பிய வெளிநாட்டவர் கைது

சிறப்பு முகாமில் தப்பிய வெளிநாட்டவர் கைது

திருச்சி:திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவரை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ்கான், 48, என்பவர், விசா காலம் முடிந்தும் நம் நாட்டில் தங்கியிருந்ததால், ஜன., 25 முதல், திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். கடந்த மாதம் 22 அன்று, சிறப்பு முகாமில், அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அப்துல் ரியாஸ்கான் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து, தப்பிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, திருச்சி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து அப்துல் ரியாஸ்கானை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராமேஸ்வரத்தில் உள்ள பெற்றோரை பார்க்கச் செல்வதற்கு, திருச்சி ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவரை கைது செய்து, சென்னை, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ