உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மல்லிகை மலையில் காட்டுத்தீ

மல்லிகை மலையில் காட்டுத்தீ

திருச்சி,:திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கல்லுப்பட்டி மல்லிகை மலை, வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலையில், நேற்று முன்தினம் மாலை, காய்ந்த புற்கள் மற்றும் செடி கொடிகளில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மலை மேல் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், தீயணைப்பு வீரர்கள் அனைவரும், அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் அங்கிருந்த செடி, கொடிகளை வைத்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏராளமான மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் தீயில் கருகின. புத்தாநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ