உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / எஸ்.பி.,க்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர் கைது

எஸ்.பி.,க்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர் கைது

திருச்சி:திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, எஸ்.பி., வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இப்பிரச்னையால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், வருண்குமாரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி., வருண்குமார் புகாரின்படி, 'எக்ஸ்' தளத்தில் அவரை தவறாக பதிவிட்டு, மிரட்டல் விடுத்த 13 பேரை, திருச்சி தில்லை நகர் போலீசார் தேடி வருகின்றனர். இதில், விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கண்ணன், 41, திருப்பதி, 40, ஆகியோர் மீதும் புகார் உள்ளது. அவர்களை நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, மேலும், 20க்கும் மேற்பட்டோர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ