ஆம்னி பஸ்சில் தீ உயிர் தப்பிய பயணியர்
திருச்சி:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் இருந்து சென்னைக்கு, வேல்முருகன் என்ற ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, திருச்சி, மன்னார்புரம் அருகே வந்தபோது, ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து ஏற்பட்ட தீப்பொறியால், பஸ்சில் தீப்பிடித்தது.இதை பார்த்த டிரைவர், உடனடியாக பஸ்சை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, ஓரமாக நிறுத்தினர். பின், அனைத்து பயணியரையும், உடனடியாக பஸ்சில் இருந்து இறங்குமாறு உத்தரவிட்டார். அனைத்து பயணியரும், அவர்களின் உடமைகளுடன் பத்திரமாக வெளியேறினர்.பயணியர் இறங்கிய பின், பஸ்சில் பிடித்த தீ, மளமளவென அனைத்து பகுதிகளிலும் பற்றி எரிந்தது. இதனால், பஸ்சின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சேதமாகின.தகவலறிந்த கன்டோன்மென்ட் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, 30 பயணியரும் உயிர் தப்பினர்.