உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சிறுமிக்கு தொல்லை தந்தவருக்கு போக்சோ

சிறுமிக்கு தொல்லை தந்தவருக்கு போக்சோ

திருச்சி:திருச்சி மாவட்டம், குழுமணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக, உறையூரை சேர்ந்த குமரேசன், 45, பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், காலில் காயம் பட்ட, 6 வயது சிறுமி, தன் தாயுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரை கட்டு கட்டும் அறைக்கு அழைத்துச் சென்ற குமரேசன், காயத்துக்கு மருந்து போடும் போது, சிறுமிக்கு முத்தம் கொடுத்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமி வெளியே நின்றிருந்த தன் தாயிடம் கூற, அவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, துப்புரவு பணியாளர் குமரேசனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ