கோவில் வளாகத்தில் அர்ச்சகர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், க.அலங்கம்பட்டியில் பாலக்காட்டு அம்மன், ஸ்ரீ கம்பக்கருப்பசாமி, ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மணப்பாறை - துவரங்குறிச்சி பிரிவு சாலையில் நுழைவாயில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன், 62, நுழைவாயில் மீதேறி கும்பாபிஷேகம் செய்து முடித்து, கீழே இறங்கியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.