உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட்

ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட்

திருச்சி:திருச்சி, புத்துாரில் சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சார்பில் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு பணியாற்றிய நஸ்ருதீன், 50, என்பவர், பணியின் போது குடிபோதையில் இருந்ததாகவும், ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.அதன் அடிப்படையில், விசாரணை நடந்து, நேற்று விற்பனையாளர் நஸ்ருதீனை, தற்காலிக பணிநீக்கம் செய்து, கூட்டுறவு பண்டக சாலையின் துணைபதிவாளர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ