| ADDED : ஜூலை 31, 2024 12:35 AM
திருச்சி,:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் உள்ள அரசுப்பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த கீர்த்திவாசன், 15, என்ற மாணவர், பத்தாம் வகுப்பு படித்தார். சரியாக படிக்காமல், வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்தார். இதை ஆசிரியர் ஆறுமுகம், 44, கண்டித்தார். மேலும், கீர்த்திவாசன், தன் மாமா வீட்டில் தங்கி படிப்பதால், அவரது மாமாவுக்கும் ஆசிரியர் மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் மாணவர் விரக்தி அடைந்தார்.நேற்று காலை பள்ளிக்கு தன் மாமா அழகரசன் என்பவருடன், கீர்த்திவாசன் பள்ளிக்கு வந்தார். வரும்போதே, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வந்தார். இதனால் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் மாணவர் வாந்தி எடுத்து, மயங்கினார்.உடனடியாக பெருவளப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து, பின,் திருச்சி அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில், மாணவர் கீர்த்திவாசன் இறந்தார். லால்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.