மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
15-Feb-2025
திருச்சி:சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதி, பெண் பக்தர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.திருச்சி மாவட்டம், கீழப்பளுவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூரில் புதிதாக கட்டி வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் எதிரே நேற்று அதிகாலை நடந்து சென்றபோது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வாகனம் ஒன்று, பக்தர்கள் மீது மோதி, நிற்காமல் சென்றதுஇதில், கீழப்பளுவஞ்சி வெள்ளையம்மாள், 50, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்லம்மாள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். எடமலைப்பட்டி புதுார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
15-Feb-2025