உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை

கல்லுாரிகளில் 25 சதவீதம் நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை

திருச்சி: ''தமிழக கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 25 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார். திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது: பொறியியல், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கூடுதலாக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை, மூன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதற்கான புள்ளி விபரம் உள்ளது. தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுகளை கூடுதலாக துவங்கியதில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலமாக கேரளா இருந்தது. தற் போது, இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rvs
ஆக 29, 2025 10:24

Nearly 9000 Asst Prof posting vacant in Govt Arts and Science colleges in tamilnadu. Tamilnadu govt managing with guest lecturers with minimum salary of Rs 25000. How they can deliver lectures effectively? Govt could not make any effort to fill such a regular vacancies, the quality of education is in question


முக்கிய வீடியோ