உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / டிராக்டர் மீது சிமென்ட் லாரி மோதி 3 பெண்கள் பலி 5 பேர் படுகாயம்

டிராக்டர் மீது சிமென்ட் லாரி மோதி 3 பெண்கள் பலி 5 பேர் படுகாயம்

திருச்சி:டிராக்டர் மீது சிமென்ட் லாரி மோதிய விபத்தில், டிராக்டர் டிரெய்லரில் அமர்ந்து சென்ற மூன்று பெண்கள் உயிரிழந்தனர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூரைச் சேர்ந்த, 20 பெண்கள், தங்கள் குடும்பத்துக்கு அரிசி வாங்க, நேற்று மதியம் மண்ணச்சநல்லுார் அரிசி ஆலைக்கு வந்தனர். அங்கு, 6 டன் அரிசி வாங்கி, டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லரில் ஏற்றிய பெண்களில் பலர், பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர். டிராக்டரின் முன்பக்கத்தில் ராமாயி, பர்வதம், கமலம் உள்ளிட்ட ஐந்து பேர் அமர்ந்து வந்துள்ளனர். டிரெய்லரில் வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளின் மீது சாந்தி, 58, செல்வநாயகி, 60, ராசாம்பாள், 60, ஆகிய மூவர் அமர்ந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், திருச்சி - சிதம்பரம் நான்கு வழிச்சாலையில், புள்ளம்பாடி அருகே இருதயபுரத்தில் டிராக்டர் சென்று கொண்டுஇருந்தது. அப்போது, சிமென்ட் மூட்டைகளை ஏற்ற, அரியலுார் நோக்கி சென்ற டாரஸ் லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது.இதில், டிராக்டர், டிரெய்லருடன் கவிழ்ந்ததில், சாந்தி, செல்வநாயகி, ராசாம்பாள், அரிசி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிராக்டரின் முன்பக்கம் உட்கார்ந்து வந்த ஐந்து பெண்கள் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். லால்குடி போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டாரஸ் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை