உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்

பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்

திருச்சி: காரை முந்தி செல்ல முயன்ற பஸ் கவிழ்ந்து, 30 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ் பெரம்பலுார் சென்று கொண்டிருந்தது. அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை ஓட்டினார். கிழக்குவாடியில் பஸ் சென்ற போது, முன்னால் சென்ற காரை முந்த முயன்றது. அப்போது, பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணித்த 30 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் , துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 9 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை