கொள்ளிடம் ஆற்றில் கார் பாய்ந்து 4 பேர் படுகாயம்
திருச்சி: கரூர் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த ராஜா, திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர், காரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். நேற்று மாலை, அவர்கள் இருவரும் கார் ஓட்டி பழகியுள்ளனர்.யாத்ரி நிவாஸ் அருகே, பஞ்சக்கரை பகுதியில் ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த திவாகரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீது மோதியது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, தாறுமாறாக ஓடிய கார், பஞ்சக்கரை சாலையை ஒட்டியிருந்த கொள்ளிடம் ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், பெரும் விபரீதம் ஏற்படவில்லை. தகவலறிந்த போலீசார், காருக்குள் சிக்கிய இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஸ்ரீரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.