மேலும் செய்திகள்
பறவை காய்ச்சலால் 2 வயது குழந்தை பலி
03-Apr-2025
திருச்சி: திருச்சி மாநகராட்சி, உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டி, அப்பகுதி மக்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கமிஷனர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உறையூரில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இப்பகுதியில் பிரியங்கா என்ற நான்கரை வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் சிகிச்சை அளித்துள்ளனர்.சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.குழந்தைக்கு தொற்று பாதிப்பால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய முறை என, தொற்று நீக்குதல், ஓதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தை இறப்பு நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.மேலும், இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாக்களில் அதிகமான மக்கள் கூடியதாலும், அன்னதான நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக மாநகராட்சி வாகனங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் கசிவு ஏதும் உள்ளதா என மாநகராட்சி பணியாளர்களால் ஆய்வு நடந்து வருகிறது. ஆறு இடங்களில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
03-Apr-2025