உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு தம்பதி உட்பட 7 பேர் மீது வழக்கு

 ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு தம்பதி உட்பட 7 பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சி வக்கீலின் 15 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் குத்தகை பத்திரப்பதிவு செய்த தம்பதி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -திருச்சி, மேல சிந்தாமணியை சேர்ந்தவர் செந்தில்நாதன், 61. வக்கீலான இவருக்கு, மாரீஸ் தியேட்டர் பகுதியிலும், அண்ணாமலை நகர் பகுதியிலும் ஒன்றேகால் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 15 கோடி ரூபாய். இந்த இடத்தை அடமானம் வைக்க வில்லங்கம் பார்த்தபோது, அது வக்கீல் செந்தில்நாதன் உறவினர் சுரேஷ்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் போலியாக குத்தகை பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் போலீசில் புகார் அளித்தார். ஜெயராமன் வாய்மொழியாக தங்களுக்கு குத்தகைக்கு கொடுத்ததாகவும், அவர் இறந்தபின், ஜெயராமன் மனைவி வாடகை வாங்கியதாகவும் போலி குத்தகை பத்திரப்பதிவில் கூறப்பட்டிருந்தது. விசாரணையில், செந்தில்நாதனின் தந்தை ஜெயராமன், 1999ல் இறந்துவிட, போலி பத்திரம் பதிந்தவர்கள், 1991ல் இறந்ததாக சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதன்மூலம் போலி குத்தகை பத்திரப்பதிவு நடந்தது தெரியவந்து, சுரேஷ்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி, கிழக்கு தாசில்தார், கோட்டை சார் - பதிவாளர், சாட்சி கையெழுத்திட்ட மூவர் என, மொத்தம் ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை