உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  மகன் பராமரிக்காததால் தம்பதி தற்கொலை

 மகன் பராமரிக்காததால் தம்பதி தற்கொலை

திருச்சி: திருச்சியில், மகன் சரியாக பராமரிக்காததால் மனமுடைந்த வயது முதிர்ந்த தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்தனர். திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே, தேவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 65. இவரது மனைவி நல்லம்மாள், 61. தோட்டத்து வீட்டில் ஒரு பகுதியில் மகன் வீரபாண்டியும், மருமகளும் வசிக்கின்றனர். அதே வீட்டின் பின் பகுதியில், வயது முதிந்த தம்பதி இருவரும் வசித்தனர். நேற்று முன்தினம் இரவு, பொன்னுசாமி, நல்லம்மாள் ஆகிய இருவரும் தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தனர். டி.எஸ்.பி., சுரேஷ்குமார் நடத்திய விசாரணையில், மகன் சரியாக பராமரிக்காததால், வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரும் மனமுடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, தெரிய வந்தது. தா.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை