உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் கொலை தம்பதிக்கு ஆயுள் தண்டனை

மணப்பாறை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தாழக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கபாண்டியன், 23. இவரின் உறவினர் சுப்பிரமணியன், 55, அவரது மனைவி மாலதி, 50, ஆகியோர், தங்கபாண்டியன் வீட்டின் அருகில் வசித்தனர். இரு குடும்பத்துக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக, பிரச்னை இருந்தது. தங்கபாண்டியன் தலையீட்டால், சுப்பிரமணியனால் பூர்வீக சொத்தை விற்க முடியவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும், அவரது மனைவியும் சேர்ந்து, 2022, மே 18 இரவில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தங்கபாண்டியனை, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். வையம்பட்டி போலீசார் தம்பதியை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட கூடுதல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுவாமிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், தங்கபாண்டியனை கொலை செய்த சுப்பிரமணி, மாலதி தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ