உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விவசாயி கொலை வழக்கு தம்பதி, மகனுக்கு ஆயுள்

விவசாயி கொலை வழக்கு தம்பதி, மகனுக்கு ஆயுள்

திருச்சி:விவசாயியை கொலை செய்த வழக்கில், வயதான தம்பதி, அவர்களின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே பாலப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 45. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த உத்தண்டன் குடும்பத்தினருக்கும், பொது கிணற்றை துார்வாரி விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்துவதில் பிரச்னை இருந்தது. இந்த பிரச்னையால் 2024 ஆக., 7ல் நடந்த தகராறில், பழனிசாமியை, உத்தண்டன், 76, அவரது மனைவி ராஜாமணி, 65, மகன் அழகேசன், 45, ஆகியோர் சேர்ந்து, அரிவாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும் கொலை செய்தனர். முசிறி போலீசார், உத்தண்டன், அவரது மனைவி, மகனை கைது செய்தனர். இந்த வழக்கில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பளித்தார். உத்தண்டன், ராஜாமணி, அழகேசன் ஆகியோருக்கு ஆயுள் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !