உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

திருச்சி:ஸ்ரீரங்கத்தில், கோவில் நிலங்களை ஆக் கிரமித்து கட்டப்பட்ட 10 கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றிக் கொள்ள, அறநிலையத்துறை அதிகாரிகள், 2020க்கு முன்பே கடைக்காரர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினர். அந்நிலம் உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமானது என்று கூறி கடைக்காரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அறநிலையத் துறைக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், 20 ஆண்டுகளாக கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 10 கடைகளை, அதிகாரிகள் இடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ