உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது

லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், தன் தந்தை கணேசன் பெயரில், லால்குடி அருகே 94 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். அதை விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் பெயர், மோகன் வாங்கிய பட்டாவில் கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பெயரை திருத்தம் செய்ய, மார்ச் மாதம் லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் மோகன் விண்ணப்பித்தார். மனு, லால்குடி துணை தாசில்தார் ரவிகுமார், 59, என்பவரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இது குறித்து மோகன், ரவிகுமாரை சந்தித்து கேட்டபோது, 20,000 ரூபாயை லஞ்சமாக அவர் கேட்டார்.இது குறித்து மோகன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று மதியம் லால்குடி தாசில்தார் அலுவலகத்தில், 20,000 ரூபாய் லஞ்சப் பணத்தை, மோகனிடம் இருந்து ரவிகுமார் வாங்கியபோது, ரவிகுமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ