உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மழைநீர் வடிகால், சிமென்ட் ரோடு ஜெர்மன் வளர்ச்சி வங்கி குழு ஆய்வு

மழைநீர் வடிகால், சிமென்ட் ரோடு ஜெர்மன் வளர்ச்சி வங்கி குழு ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால், ரோடுகளை மேம்படுத்த 24.30 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முழுவதும் தற்போதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி குழுவினர் மற்றும் மத்திய அரசு, தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்ட அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி பகுதியில் 24.30 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்திய திட்டங்கள் பற்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி குழுவினர் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்ட அலுவலர் குழுவினர் மத்தியில் மாநகராட்சி கமிஷனர் வீரராகவராவ் ஆலோசனை நடத்தினார். பின் இக்குழுவினர் புத்தூர் ஆப்பக்காரத்தெரு பகுதியில் 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமெ ன்ட் சாலையை பார்வையிட்டனர். கண்டோன்மெண்ட் பகுதியில் பறவைகள் சாலை, ஒத்தக்கடை புதுத்தெரு உட்பட 69 லட்சம் ரூபாயில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளதையும், திண்டுக்கல் ரோட்டிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோடு அகலப்படுத்தப்பட்டு தார் ரோடாக 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டுள்ளதை ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி குழுவினர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை