ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாச்சியார் நவராத்திரி உற்சவ
விழா இம் மாதம் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடக்கிறது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாச்சியார் நவராத்திரி உற்சவ
விழா நடக்கிறது. இதில் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நாச்சியார்
மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருதல், மாலை 6 மணிக்கு நாச்சியார்
மூலஸ்தானத்திலிருந்து புறப்படுதல், இரவு 7.30 மணிக்கு கொலு மண்டபம்
சேர்தல், இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பம், இரவு 8.45 மணிக்கு கொலு முடிவு,
இரவு 9.45 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து நாச்சியார் புறப்படுதல், இரவு
10 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்.இரண்டாம் நாளான 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மாலை 5
மணிக்கு ஸ்ரீ நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுதல், மாலை 6
மணிக்கு கொலு மண்டபம் சேர்தல், இரவு 7 மணிக்கு கொலு ஆரம்பம், இரவு 8
மணிக்கு கொலு முடிதல், இரவு 9.30 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து
புறப்படுதல், இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேருதல். அக்.,3ம் தேதி ஸ்ரீ
நாச்சியார் திருவடி சேவையும், 5ம் தேதி சரஸ்வதி பூஜை, ஸ்ரீ நவராத்திரி
பூஜையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார்
புறப்படுதல், 5.30 மணிக்கு கொலு மண்டபம் சேருதல், மாலை 6.30 மணிக்கு
திருமஞ்சனம் கண்டறிதல், இரவு 10 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து
புறப்படுதல், இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார் ஸ்ரீ நாச்சியார்.
அக்., 6ம் தேதி பெருமாள் விஜயதசமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை
6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்படுதல்,
காலை 9 ம ணிக்கு வழி நடை உபயங்கள் கண்டருளி சிங்கர்கோவில் ஆஸ்தான மண்டபம்
அடைதல். மாலை 6 மணிக்கு சிங்கர்கோவில் ஆஸ்தான மண்டபத்திலிருந்து குதிரை
வாகனத்தில் புறப்படுதல், இரவு 9 மணி க்கு அம்பு போட்டு சாத்தார வீதி வழியாக
வலம் வந்து சந்தன மண்டபம் சேர்தல், இரவு 10 மணிக்கு நம்பெருமாள் உபய
நாச்சியாருடன் திருமஞ்சனம் நடக்கிறது.