| ADDED : செப் 24, 2011 01:00 AM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்
பரஞ்ஜோதி முக்கிய பிரமுகர்களிடம் நேற்று ஆதரவு திரட்டினார். திருச்சி
மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த
மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்ததையடுத்து, காலியாக உள்ள திருச்சி மேற்கு
தொகுதிக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்,
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி போட்டியிடுகிறார்.
அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள்முதல் மாநகரில் உள்ள முக்கிய
பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று மதியம் 1.30
மணிக்கு தென்னூர் ஹைரோடு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை
முடித்து விட்டு வந்தவர்களிடம் பரஞ்ஜோதி ஆதரவு திரட்டினார். அவருடன்
திருச்சி எம்.பி., குமார், கிழக்கு தொகுதி எம்.எம்.ஏ.,வும், மாநகர் மாவட்ட
செயலாளருமான மனோகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட் கட்சி
நிர்வாகிகள் பங்கேற்றனர். திருச்சி மாநகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள்,
மதத்தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து பரஞ்ஜோதி தீவிரமாக
ஆதரவு கேட்டு வருகிறார்.