உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வீட்டில் நின்ற பெண்ணிடம்4 பவுன் செயின் பறித்த மர்ம நபர் தப்பிஓட்டம்

வீட்டில் நின்ற பெண்ணிடம்4 பவுன் செயின் பறித்த மர்ம நபர் தப்பிஓட்டம்

திருச்சி: திருச்சியில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நான்கு பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம மனிதனை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் செவந்திபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (60). இவர் கடந்த ஆறாம் தேதி இரவு 8.45 மணியளவில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பக்கம் வேகமாக பைக்கில் வந்த மர்ம மனிதன், வீட்டின் முன் ரோட்டில் நின்று கொண்டிருந்த ரேவதி கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றான். செயின் பறிப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் திரண்டு வந்து, டூவீலரில் சென்ற வாலிபரை துரத்தியுள்ளனர். மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் டூவீலரை கீழே போட்டு விட்டு, மர்மமனிதன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். 'சுசுகீ' டூவீலரை பொதுமக்கள் கைப்பற்றி போலீஸில் ஒப்படைத்தனர். ரேவதி அளித்த புகாரின் பேரில், உறையூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் விட்டுச் சென்ற டூவீலரின் எண்ணை வைத்து, திருடனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை