உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விபத்தில் மனைவி, குழந்தை பலி மனமுடைந்த வியாபாரி தற்கொலை

விபத்தில் மனைவி, குழந்தை பலி மனமுடைந்த வியாபாரி தற்கொலை

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே நடந்த பஸ் விபத்தில் மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்தவர் துக்கம் தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி-மதுரை மெயின்ரோட்டில் துவரங்குறிச்சி அடுத்துள்ள லஞ்சமேடு கைகாட்டி என்ற இடத்தில் கடந்த ஐந்தாம் தேதி ஆம்னி பஸ்-அரசு பஸ் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மூன்று குழந்தைகளும், மூன்று ஆண்களும், 10 பெண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் அகரப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (35) மனைவி அமராவதியும் (30), அவரது ஒன்றரை வயது மகள் காவியாவும் அடங்குவர். முறுக்கு வியாபாரியான வெள்ளைச்சாமி மனைவி மற்றும் குழந்தையை பரிகொடுத்த சோகத்தில் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்துள்ளார். அவர்களின் காரியங்களையும் செய்துள்ளார்.இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நிவாரண நிதியை, கரூர் எம்.பி., தம்பிதுரை நேற்று முன்தினம் அகரப்பட்டி வந்து வெள்ளைச்சாமியிடம் கொடுத்து விட்டுச் சென்றார். மனைவி அமராவதி மற்றும் குழந்தை காவியா இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாமல் தவித்து வந்த வெள்ளைச்சாமி, நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்கொலை குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, குழந்தை இறந்த துக்கம் தளாமல் முறுக்கு வியாபாரி தற்கொலை செய்து கொண்டதால், அகரப்பட்டி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ