உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கீடு

இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கீடு

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பணி ஒதுக்கீடு கம்ப்யூட்டர் மூலம் நேற்று நடந்தது. அக்., 13ல் நடைபெற உள்ள திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கம்ப்யூட்டர் குலுக்கல் முயையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. தேர்தல் பார்வையாளர் ஆர்.கே.,பதக் (பொது) தலைமையில், கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது. திருச்சி மேற்கு தொகுதியில் 240 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. ஒரு மையத்துக்கு ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர், 3 ஓட்டுச்சாவடி உதவி அலுவலர் என 4 பணியாளர்கள் ரிசர்வ் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடியில் கூடுதலாக ஒரு பணியாளரும் சேர்த்து 1,175 பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இப்பணி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக நேற்று ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபடுத்த தயாரிக்கப்பட்ட 2,403 பேர் கொண்ட பட்டியலில் இருந்து 1,175 பேர் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இப்பணி தேர்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், தாசில்தார்கள் நாகநாதன் (தேர்தல்), ராதாகிருஷ்ணன் (திருச்சி) உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !