உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / "ஷாக் அடித்து மீன்வியாபாரி பரிதாப பலி

"ஷாக் அடித்து மீன்வியாபாரி பரிதாப பலி

திருச்சி: திருச்சியில் ரோட்டின் மீதிருந்த மின்கம்பத்தில் சாய்ந்த மீன்வியாபாரி 'ஷாக்' அடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (34). மீன் வியாபாரியான இவரின் மனைவி சண்முகராணி. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. நேற்று காலை ஏழு மணியளவில் உறையூர் சி.எஸ்.ஐ., மருத்துவமனை அருகிலுள்ள டீக்கடைக்கு மனோகரன் டீக்குடிக்க சென்றுள்ளார். கடையில் டீ போடச் சொல்லிவிட்டு அருகிலிருந்த மின்கம்பத்தில் சாய்ந்து நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். உறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ