உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு

துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு

திருவெறும்பூர்:துணை முதல்வர் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகியின் டிரவுசரை கிழித்து, 20,000 ரூபாய் திருடப்பட்டது.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்ட நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். விழா நடந்த இடத்துக்கு, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என, 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி உதயகுமாரின் வேட்டி, டிரவுசரை பிளேடால் கீறி, அவர் டிரவுசரில் வைத்திருந்த, 20,000 ரூபாயை மர்ம நபர் திருடியுள்ளார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரின் மொபைல்போன்களும் திருடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி