உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / போலி ரசீது ஊழியர்கள் டிஸ்மிஸ்

போலி ரசீது ஊழியர்கள் டிஸ்மிஸ்

திருச்சி:திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அன்னதானத்திற்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் தன் திருமண வேண்டுதல் நிறைவேறியதற்காக 5000 ரூபாய் நவ., 11ல் நன்கொடை அளித்தார். அதற்கு தரப்பட்ட ரசீது போலியானது என தெரிய வந்தது. கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில் கோயில் தகவல் மைய பணியாளர்கள் இந்துமதி, ஆர்த்தி, விஜய் ஆகியோர் சேர்ந்து போலி ரசீது கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆர்த்தி, விஜய் ஆகியோரை, 'டிஸ்மிஸ்' செய்தும், இந்துமதியை 'சஸ்பெண்ட்' செய்தும் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி