உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

திருச்சி:திருச்சியில், ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு - கட்சி சார்பற்றது, மாநில ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், தேவையான இடங்களில், கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளை உடனடியாக திறக்கவேண்டும். கொள்முதல் நிலையங்களில்,தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும். சுமை துாக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும். மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழகம் முழுவதும் வரும் டிச., 15ம் தேதி முதல் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படும். திருச்சி அல்லது தஞ்சாவூரில் இருந்து பிரசார பயணத்தை துவக்கி சென்னையில் நிறைவு செய்ய உள்ளோம். தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, தி.மு.க., அரசு விவசாயிகளிடம் கொள்ளையடிக்கிறது. 2024ல் சம்பா சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்து, அதற்கான நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி