உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பள்ளி மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் கைது

பள்ளி மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, பாப்பாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜடமங்களத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன், 15, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் ஜெகன், பள்ளி மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டி சுத்தம் செய்துள்ளார்.அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் கார் மீது எதிர்பாராமல் துடைப்பம் விழுந்ததால், தலைமை ஆசிரியர், மாணவனை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவனுக்கு, முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மாணவனின் பெற்றோர் புகார்படி, தொட்டியம் போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று சந்திரமோகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை