உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ பதிவிட்டவர் கைது

சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ பதிவிட்டவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனை மது குடிக்க வைத்த வீடியோ, சமூக வலை தளங்களில் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிறுவனை மது குடிக்க வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.திருச்சி மாவட்ட போலீசாரின் விசாரணையில், திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புதுார் உத்தமனுாரை சேர்ந்த அஜித்குமார், 34, முகநுால் பக்கத்தில் சிறுவன் மது குடிக்கும் வீடியோவை பதிவிட்டது தெரிய வந்தது.காணக்கிளியநல்லுார் போலீசார், அஜித்குமாரிடம் விசாரித்தனர். திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பகுதியில் வசிக்கும் அஜித்குமாரின் சகோதரர் பிரசாத், நண்பர்களுடன் மது குடித்த போது, அவரது மகனுக்கும் மது கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதை போனில் வீடியோ எடுத்து, அஜித்குமாருக்கு அனுப்பியதும், அவர் முகநுால் பக்கத்தில் பதிவிட்டதும் தெரிய வந்தது. போலீசார், இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ