மேலும் செய்திகள்
திருச்செங்கோட்டில் புகையிலை பறிமுதல்
20-Nov-2024
திருச்சி:திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட, 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, திருச்சி மாநகர ஏ.சி.,க்கள் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து மொபைல் போன், நாகேந்திரன் என்பவரிடம் இருந்து, 100 கிராம் கஞ்சா, நைஜீரியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரிடம் இருந்து, மொபைல்போன் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், சிறப்பு முகாம் விதிமுறைகளுக்கு முரணாக இருந்த பொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
20-Nov-2024