உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மலேஷியாவிலிருந்து வந்த விமானத்தில் இறந்த பயணி

மலேஷியாவிலிருந்து வந்த விமானத்தில் இறந்த பயணி

திருச்சி:மலேஷியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானில் பயணி இறந்தார்.மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று அதிகாலை 'ஏர் ஏசியா' விமானம் திருச்சிக்கு புறப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தெற்கு குடிபோஸ்ட் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், 43, என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார்.விமானம் திருச்சியில் தரையிறங்கியதும், விமான நிலைய டாக்டர்கள், அவரை பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். அவரது பாஸ்போர்ட் முகவரி தவிர, வேறு எந்த அடையாளமும் அவரிடம் இல்லை.அவரை, விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லவும் யாரும் வரவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தாரை தொடர்பு கொள்ள, திருச்சி விமான நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை