உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வீடுகளை சுற்றிலும் மழைநீர் அகற்றக்கோரி மக்கள் மறியல்

வீடுகளை சுற்றிலும் மழைநீர் அகற்றக்கோரி மக்கள் மறியல்

திருச்சி:திருச்சியில், கடந்த வாரம் தொடர்ந்து பலத்த மழை பெய்த போது, கொல்லாங்குளத்துக்கு மழைநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் குடியிருப்பு பகுதிகளில், தண்ணீரை திருப்பி விட்டனர். இதனால், 61வது வார்டுக்கு உட்பட்ட காஜாமலை, ஜேகே நகர், லுார்து நகர், ரோஜா நகர் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மழை நின்று, ஐந்து நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று, அப்பகுதி மக்கள் காஜாமலை - கே.கே.நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து பாதித்தது. அப்போது, மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.குடியிருப்பு பகுதிகளில் நிற்கும் தண்ணீரை அகற்றாவிட்டால், சாலை மறியலை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், 'தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை