திருச்சி சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
திருச்சி; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், அப்பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்று, ஓராண்டுக்கும் மேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு கோழி இறைச்சி அளிப்பதற்காக நடத்தப்படும் கோழிப்பண்ணையில், ராஜ்குமார் பணியமர்த்தப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் காலை, சிறை வாசல் பகுதியில், கோழிப்பண்ணைக்கு பணிக்கு சென்ற ராஜ்குமார், மாலை அங்கிருந்து தப்பி சென்றார். சிறைத்துறை போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஜூலை, 11ல் திருச்சி மத்திய சிறையில், கைதி ராஜேந்திரன் என்பவர் தப்பியோடி பின், பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.