உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தனியார் பஸ் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

தனியார் பஸ் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

திருச்சி:திருச்சி துவாக்குடி, அண்ணா வளைவு பகுதி செந்தில்குமார், 52, பெட்டவாய்த்தலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். பெட்டவாய்த்தலை திருவள்ளுவர் நகர் அருகே, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, சாலை விபத்து ஏற்பட்டதில், மூன்று பேர் காயமடைந்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் வந்தது.அங்கு சென்ற எஸ்.ஐ., செந்தில்குமார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினார். தொடர்ந்து, அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை சீரமைத்துக் கொண்டிருந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ