மேலும் செய்திகள்
புதுமாப்பிள்ளை தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
26-Sep-2025
திருச்சி:திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் மெக்கானிக் சங்கர். இவரது மனைவி மனோன்மணி, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன், தன் தாய் ரோகிணிக்கு போன் செய்த மனோன்மணி, வீட்டில் மாமனார், மாமியார் இருவரும் தன்னிடம் சண்டையிடுவதாக கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மனோன்மணி தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோமரசம்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று காலை, மனோன்மணியின் உறவினர்கள், அரசு மருத்துவமனை முன் திரண்டு, அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருச்சி மாநகர போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட வைத்தனர். ரோகிணி புகாரில், சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், திருமணம் ஆகி, ஐந்து ஆண்டுகளே ஆனதால், வரதட்சணை கொடுமையா என, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., சீனிவாசனும் விசாரிக்கிறார்.
26-Sep-2025