வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாதுகாப்புடன் செயலாற்றல்.
மேலும் செய்திகள்
கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்க கோரிக்கை
15-Dec-2025
திருச்சி: திருவெறும்பூரில், ஏ.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ள பகுதியில், அடுத்தடுத்து 17 கடைகளின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம், பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியில், திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஏ.எஸ்.பி., அலு வலகம் ஆகியவை உள்ளன. அங்கிருந்து, 300 மீட்டர் துாரத்தில், பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில், மெக்கானிக் பட்டறைகள், லேத் பட்டறைகள், அரிசி கடை, வாகனங்களுக்கு சீட் கவர் தைக்கும் கடை என, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில், பாருடன் கூடிய டாஸ்மாக் கடையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், இங்குள்ள 17 கடைகளின் பூட்டை உடைத்து, கடைகளுக்குள் புகுந்து, 1 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவெறும்பூர் போலீசார், கொள்ளை போன கடைகளை பார்வையிட்டு, கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே நாள் இரவில், திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் உள்ள 17 கடைகளில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம், பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புடன் செயலாற்றல்.
15-Dec-2025