உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சாரணர் இயக்க வைரவிழா நிகழ்ச்சி: உதயநிதி துவக்கி வைப்பு

சாரணர் இயக்க வைரவிழா நிகழ்ச்சி: உதயநிதி துவக்கி வைப்பு

திருச்சி:மணப்பாறை அருகே, 'சிப்காட் வளாகத்தில் சாரணர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரள் பேரணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நுாற்றாண்டு நினைவு விழா பெருந்திரள் பேரணியையும், துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில், பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின், 75ம் ஆண்டு வைரவிழா பெருந்திரள் பேரணி மற்றும் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா பெருந்திரள் பேரணியும் துவங்கியது.தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, சாரணர் இயக்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; அணிவகுப்பு மரியாதையை ஏற்று வைரவிழாவை துவக்கி வைத்தார். இதில், மலேஷியா, இலங்கை, சவுதி அரேபியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 14,௦௦௦க்கும் மேற்பட்ட சாரண - சாரணியர்கள் பங்கேற்றனர்.வைரவிழா கொண்டாட்டம் வரும், பிப்., 3ம் தேதி வரை நடக்கிறது. 14,௦௦௦க்கும் மேற்பட்ட சாரணர்கள் தங்கி விழாவில் பங்கேற்க வசதியாக, ௩,௦௦௦க்கும் மேற்பட்ட கூடாரங்கள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சாரணர் இயக்க துவக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:கடந்த, 2000ம் ஆண்டு சாரணர் இயக்கத்தின், 50ம் ஆண்டு பொன்விழா நடந்தது. அதில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி பங்கேற்றார். இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில், 39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அவரை பாராட்டுகிறேன்.மொழி, மதம், ஜாதிகளை கடந்து, இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் கூடி உள்ளீர்கள். மனிதர்கள் எவ்வித வேறுபாடும் இல்லாமல், மனித பண்புகளை உயர்த்தி வாழ வேண்டும் என்பது தான், கருணாநிதியின் குறிக்கோள்.இவ்வாறு உதயநிதி பேசினார்.சாரணர் இயக்க வைரவிழா துவக்க விழாவில், தமிழக அமைச்சர்கள் நேரு, மகேஷ், சுப்பிரமணியன், சிவசங்கர், பாரத சாரணர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் கண்டேல்வால், தேசிய தலைவர் அனில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவு விழா, 2ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி