உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாமியார்-மருமகள் சண்டையில் விபரீதம் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலை

மாமியார்-மருமகள் சண்டையில் விபரீதம் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலை

மணப்பாறை: மணப்பாறை அருகே மாமியார் திட்டியதால், கோபித்துக் கொண்ட மருமகள், தணீ இரண்டு மகன்களை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியை சேர்ந்தவர் கொத்தனார் கிருஷ்ணன். இவரது மனைவி லட்சுமி (30). இவர்களது மகன்கள் தேவராஜன் (11), அன்புராஜன் (9). தேவராஜன், தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பும், அன்புராஜன் அதே ஊரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பும் படித்தனர். லட்சுமிக்கும் அவரது மாமியார் மாரியாயிக்கும் கடந்த 14ம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில், மாமியார் மாரியாயி, லட்சுமியை திட்டியதாக கூறப்படுகிறது.வேலையை முடிந்துக் கொண்டு கிருஷ்ணன், வீட்டுக்கு வந்தார். மனைவிக்கும், தன் அம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது தெரிந்ததும், 'யார் பக்கம் பேசுவது?' என்று மனம் வருத்தப்பட்டார். இதுதொடர்பாக கணவன் - மனைவி இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு வீட்டில் அனைவரும் தூங்கிய பின், லட்சுமி இரண்டு மகன்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். நேற்று முன்தினம் 15ம் தேதி காலையில் மனைவி, மகன்கள் காணாதது கண்டு கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். மூவரையும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கிருஷ்ணனின் அப்பா சோலைமலை வயலுக்கு சென்றார். அவரது சொந்த கிணற்றில் மருமகளும், பேரன்களும் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., தொல்காப்பியன், இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன், எஸ்.ஐ., பரமன் ஆகியோர் நேரில் சென்று, மூவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை