உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விவசாயத் தொழிலாளர் சங்கம் து.குறிச்சி அருகே ஆர்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளர் சங்கம் து.குறிச்சி அருகே ஆர்ப்பாட்டம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே கல்லுப்பட்டியிலுள்ள மருங்காபுரி யூனியன் அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்மையான வறுமைக்கோடு பட்டியல் தயார் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மருங்காபுரி ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முத்து, லெட்சுமணன், சண்முகம் முன்னிலை வகித்தனர். இதில், இ.கம்யூ., திருச்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் ஆகியோர் பேசினர். இதில், விவசாய தொழிலாளர் வாரியத்தை செயல்படுத்த வேண்டும், 58 வயது முடிந்த விவசாய தொழிலாளர் அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும், கோவில்பட்டி வார சந்தையை விரிவுபடுத்தி, குடிநீர், தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மருங்காபுரி ஒன்றியத்தில் தோட்டகலைத்துறை மூலமாக அரசு வழங்கும் அனைத்து மான்ய விவசாய பொருட்களை, விவசாயிகள் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இ.கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மருங்காபுரி இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் வீரமணி, ஏ.ஐ.ஒய்.எப்., மாவட்ட செயலாளர் அப்துல்காதர், தமிழ் மாநில விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் பாலு, மணப்பாறை நகர இ.கம்யூ., பொருளாளர் உசைன், கருப்பையா, செல்வம், ரவிஞானம், பால்ராஜ், சரவணன், ஜெயலட்சுமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தவசிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ