| ADDED : ஆக 23, 2011 01:13 AM
தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் எம்.புதுப்பட்டியில் உள்ள செல்லம்மாள் வித்யாஷ்ரமம் சி.பி.எஸ்.இ., பள்ளியின் முதலாமாண்டு விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரேமலதா முன்னிலை வகித்தார். தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளையொட்டி மாணவ, மாணவியருக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மோகனகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினார். கல்வி அதிகாரி மோகன குமார் பேசுகையில், ''மாணவ, மாணவியர் படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்று இப்பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை பெற்று தர வேண்டும். மாணவ, மாணவியர் நன்கு படித்து இந்த சமுதாயத்திற்கு தங்களாலான உதவிகளை செய்ய வேண்டும்,'' என்றார். விழாவில், சென்னை தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ரேணுகா, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக சிலம்பம், கராத்தே போட்டிகள், ஜிம்னாஸ்டிக் உட்பட கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் பார்øவாளர்கள் மத்தியில் செய்து காட்டினர்.உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.