உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கைதிகள் சேர்ந்து தாக்கியதில் திருச்சி துணை ஜெயிலர் காயம்

கைதிகள் சேர்ந்து தாக்கியதில் திருச்சி துணை ஜெயிலர் காயம்

திருச்சி:திருச்சி மத்திய சிறையில் நான்கு கைதிகள் சேர்ந்து, துணை ஜெயிலரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன், 28, தண்டனை கைதியாக உள்ளார். நேற்று முன்தினம் மதியம், சிறையில் இவர் துாங்கிக் கொண்டிருந்த போது, அவ்வழியே சோதனைக்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதனை பார்த்து, 'ஏன் துாங்கிக் கொண்டிருக்கிறாய்?' என, கேட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k86axoc9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு, ஹரிஹரசுதன் திமிராக பதில் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மணிகண்டனை, ஹரிஹரசுதன் தாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக, அதே அறையில் தங்கியிருந்த தண்டனை கைதிகள், ஆனந்த், ராஜேஷ், மகாதேவன் ஆகியோரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த சிறைத்துறை போலீசார், அவர்களை விலக்கி விட்டு, மணிகண்டனை காப்பாற்றினர். இத்தாக்குதலில் மணிகண்டன் காயமடைந்தார். கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி