உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரம்ஜான் பண்டிகை கோலாகலம் : பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகை கோலாகலம் : பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

திருச்சி: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.திருச்சி கண்டோன்மென்ட், பறவைகள் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், மவுலி முபாரக் அலி தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு தொழுகை நடத்தி, ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதேபோல், பெரியகடைவீதி, சவுக் முகாம் மதியா பள்ளிவாசல், மார்க்கெட் பேகம் சாஹிபா, பீரங்கி குளத்தெரு அமீர், சுபாஸ் போஸ் ரோடு ஹசன்பாக், நத்தர்ஷா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.த.மு.மு.க., சார்பில்சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு தொழுகை நடந்தது. திருச்சி ஆற்காடு இளவரசர் தர்ம பரிபாலன காரியாலயம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹிலூர் பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஜமாத் தலைவர் அப்துல் அஜிஸ், செயலாளர் இஸ்மாயில்சேட் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில், உறையூர் 13வது வார்டில் ரம்ஜானையொட்டி இலவச பிரியாணி அரிசி, வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. முன்னாள் வட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மனோகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜெ., பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் நடராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கலிலுல் ரகுமான், இளைஞரணி செயலாளர் பத்மநாபன், தொகுதி செயலாளர் வரகனேரி ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ