உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / படிக்கும் மாணவர்விபத்து காப்பீட்டில்சேரும் நிகழ்ச்சி

படிக்கும் மாணவர்விபத்து காப்பீட்டில்சேரும் நிகழ்ச்சி

தொட்டியம்: தொட்டியம், தோளுர்பட்டி, கொங்குநாடு பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் காலத்தில் பாதுகாப்பினை கருதி விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேரும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.காப்பீட்டு திட்டம் நாமக்கல் ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கோ லிட்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் பங்கேற்று காப்பீட்டு ஒப்பந்தத்தை வழங்கினார். கொங்குநாடு கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி தலைமை வகித்து காப்பீட்டு ஒப்பந்தத்தை பெற்றார். நிகழ்ச்சியில், கொங்குநாடு பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோசா, கல்லூரி ஒருங்கிணை ப்பாளர் பேராசிரியர் குமரவேல், அனைத்து துறை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ